நினைவு தினத்தையொட்டி ஜி.கே.மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி ஜி.கே.மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 31 Aug 2019 3:00 AM IST (Updated: 31 Aug 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலத்தில் ஜி.கே. மூப்பனார் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கபிஸ்தலம், 

கபிஸ்தலம் ஸ்ரீ கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.மூப்பனார் மற்றும் அவரது சகோதரர் சம்பத் மூப்பனார் ஆகியோரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள ஜி.கே. மூப்பனார் சிலைக்கு அவரது சகோதரரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினருமான சந்திரசேகரமூப்பனார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், அன்னதானமும் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி அன்னசத்திரத்தின் டிரஸ்டி கோவிந்தசாமி மூப்பனார், சதன் குமார் மூப்பனார், சாமிநாத மூப்பனார், மாவட்ட தலைவர் ஜுர்ஜூஸ், மாநில இணை செயலாளர் சாதிக்அலி, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார், வட்டார தலைவர்கள் ஜெயக்குமார், சேதுராமன், நகர தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் விவேக், மாஸ்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காமராஜ், செல்வம், நாகராஜன்,முருகராஜ், குருநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் இளங்கோ, சவுந்தரராஜன், சத்திர மேலாளர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாபநாசம் நகரத்தில் வட்டார, நகர, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜுர்ஜூஸ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சேதுராமன் வரவேற்றார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர மூப்பனார் கலந்து கொண்டு ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேட்டி-சேலை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார். இதில் கிழக்கு வட்டார தலைவர் ஜெயக்குமார், நகர தலைவர் தனபால், நகர நிர்வாகிகள் ராமதாஸ்,சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து கபிஸ்தலம் பாலக்கரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மூப்பனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நாகராஜன், செல்வம், மாதவன், பிரபாகரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story