ஊ.மங்கலம் அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை
ஊ.மங்கலம் அருகே வீட்டுவேலை செய்யாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கம்மாபுரம்,
ஊ.மங்கலம் அடுத்த அரசக்குழி அருகே உள்ள ஊத்தாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகள் ஜோதிலட்சுமி(வயது 21). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஜோதிலட்சுமி வீட்டு வேலை செய்யாமல் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார். இதைபார்த்த தாய் இளவரசி ஏன் வீட்டுவேலை செய்யாமல் டி.வி. பார்க்கிறாய்? என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோதிலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதிலட்சுமி உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வேலை செய்யாமல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story