கும்பல் கற்பழிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் செம்பூரில் தேசியவாத காங்கிரசார் கண்டன பேரணி
4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து செம்பூரில் தேசியவாத காங்கிரசார் கண்டன பேரணி நடத்தினார்கள். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு அமைக்க சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.
மும்பை,
மும்பை சுன்னாப்பட்டியில் கடந்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாட வந்திருந்த அவுரங்காபாத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது நண்பர்கள் 4 பேரால் கற்பழிக்கப்பட்டார். இதில் உடல் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த அவரது நண்பர்கள் நான்கு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று செம்பூரில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடந்தது.
செம்பூர் லால்டோங்கிரி பகுதியில் இருந்து தொடங்கி சுன்னாப்பட்டி போலீஸ் நிலையம் வரை நடந்த இந்த பேரணியில் சுப்ரியா சுலே எம்.பி., கட்சியின் மும்பை தலைவர் நவாப் மாலிக், சட்ட மேலவை உறுப்பினர் வித்யா சவான் உள்பட ஏராளமான தேசியவாத காங்கிரசார் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் சுன்னாப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.
பின்னர் சுப்ரியா சுலே எம்.பி. கூறுகையில், ‘‘4 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த இந்த சம்பவத்தில் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை. மாநில அரசு அனைவரையும் அச்சுறுத்த தான் முயற்சி செய்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு உணர்ச்சியில்லாமல் இருக்கிறது. பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Tags :
Next Story