மாவட்ட செய்திகள்

திருப்பூரில், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேர் கைது + "||" + In Tirupur, 2 persons were arrested for stealing Rs 14 lakh from a woman's office in the Collector's office

திருப்பூரில், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேர் கைது

திருப்பூரில், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேர் கைது
திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருடைய மனைவி சத்தியசுந்தரி (வயது 39). இவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி காலையில் செந்தில்குமார் வெளியில் சென்று விட்டார்.


அதை தொடர்ந்து சத்தியசுந்தரியும் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டனர். பின்னர் அன்று மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்பிய சத்தியசுந்தரி வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்திய சுந்தரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியசுந்தரி வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (29), காங்கேயத்தை சேர்ந்த யுவராஜ் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது
5 ரூபாய் மீதம் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தண்டராம்பட்டு தாலுகா கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜி (வயது 22). இவர் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3. எலக்ட்ரீசியனை தாக்கியவர் கைது
வேட்டவலம் அருகே கல்லாய்சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதி (வயது 31), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழேந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (38), கட்டிட மேஸ்திரி.
4. வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது
வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை