வருகிற 3-ந் தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்


வருகிற 3-ந் தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
x

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 3-ந்தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை,

முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், தாரணி ஆகியோர் பொது நல வழக்குகள், ரிட் அப்பீல் வழக்குகள், கிரிமினல் அவமதிப்பு மற்றும் அவமதிப்பு தொடர்பான அப்பீல் வழக்குகளை விசாரிக்கின்றனர்.

2-வது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், கிரிமினல் வழக்குகள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் உள்பட) ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

நீதிபதி வி.எம்.வேலுமணி, 2016-ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் வழக்குகளையும் விசாரிக்கின்றார்.

2015-ம் ஆண்டு வரை தாக்கலான தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரிக்கிறார்.

கிரிமினல் அப்பீல் வழக்குகள் (அதாவது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் அப்பீல் உள்பட), 2015-ம் ஆண்டில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் ரிவிஷன் வழக்குகளை நீதிபதி வி.பார்த்திபன் விசாரிக்கிறார்.

நீதிபதி எம்.கோவிந்தராஜ் மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகன வரி மற்றும் அனைத்து வரிகள், ஏற்றுமதி-இறக்குமதி, சுங்கம் மற்றும் கலால் வரிகள், சுரங்கம் மற்றும் கனிமங்கள், வனம், தொழில் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கிறார்.

நீதிபதி எம்.சுந்தர் பொது சிறு வழக்குகள், கல்வி, நில சீர்திருத்தம், நில குத்தகை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச்சட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கிறார்.

நீதிபதி ஜெ.நிஷாபானு, கடந்த 2014-ம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள முதல்நிலை அப்பீல் மனுக்கள், 2-ம் நிலை அப்பீல் மனுக்கள் அனைத்தையும் விசாரிக்கிறார்.

கிரிமினல் மனுக்கள், முன்ஜாமீன், ஜாமீன், ரத்து செய்யக்கோரும் மனுக்கள், முன்ஜாமீன்-ஜாமீன் மனுக்களில் தளர்வு மற்றும் திருத்தம் செய்யக்கோரும் மனுக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கிறார். நீதிபதி பி.டி.ஆஷா, 2015-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்கள், சிறு வழக்குகளில் 2-ம் நிலை அப்பீல் மனுக்கள், நிறுவனங்களின் அப்பீல் மனுக்கள், சிவில் சிறு வழக்குகளை மாற்றக்கோரிய வழக்குகள், சிவில் ரிவிஷன் மனுக்களில் 2013-ம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 2018-ம் ஆண்டு முதல் தாக்கல் ஆகியுள்ள எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி பி.புகழேந்தி, 2014-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள கிரிமினல் அப்பீல் மனுக்கள்(பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கில் அப்பீல் உள்ளிட்டவை), சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்பு வழக்குகள்(ஜாமீன்- முன்ஜாமீன் மனுக்களை தவிர) ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி, 2015-ம் ஆண்டு முதல் தாக்கலான சிவில் சிறுவழக்குகளின் அப்பீல் மனுக்களையும், சிவில் ரிவிஷன் மனுக்களையும் விசாரிக்கிறார்.

மேற்கண்ட தகவல் சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story