குட்டையில் ‘கிராவல்’ மண் எடுக்க எதிர்ப்பு: டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
சத்தியமங்கலத்தில் குட்டையில் ‘கிராவல்’ மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தில் அத்தாணி செல்லும் ரோட்டில் எம்.ஜி.நகர் பிரிவு பகுதிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் விவசாயிகள் 9 டிராக்டர்களுடன் வந்தனர். பின்னா அவர்கள் அனைவரும் திடீரென டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் ஆங்காங்கே அப்படியே நின்றன. அதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மைதிலி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘சத்தியமங்கலம் அருகே கொமராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் குட்டைகள் உள்ளன. இந்த குட்டைகளில் மண் எடுக்க சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கியிருந்தோம். அதன்படி இன்று (நேற்று) காலை மலையடிப்புதூர் குட்டையில் இருந்து ‘கிராவல்’ மண் எடுக்க டிராக்டர்களுடன் சென்றோம். அப்போது குட்டையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், இங்கு மண் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு தடை விதித்தனர். இதனால்தான் நாங்கள் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.
அதற்கு தாசில்தார் கார்த்திக், ஒன்றிய ஆணையாளர் மைதிலி ஆகியோர் கூறுகையில், ‘அரசு உத்தரவுப்படி சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடிப்புதூர் குட்டையை தூர்வார ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதன்காரணமாக தற்போது குட்டையில் உள்ள ‘கிராவல்’ மண் அள்ளப்பட்டு குட்டையின் கரையில் போடும் பணி நடக்கிறது. அதனால் அந்த குட்டையில் மற்றவர்கள் மண் அள்ளுவதற்கு அனுமதி இல்லை. மற்ற குட்டைகளில் தான் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் மற்ற குட்டைகளில் மட்டும் மண் எடுத்துக்கொள்ளலாம்’ என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story