தமிழகத்தில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் சாலை விபத்துகள் 24 சதவீதம்குறைந்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கோவை,
அகில இந்திய போக்குவரத்து துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அகில இந்திய போக்குவரத்து துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கத் தலைவர் அஸ்வத் அகமது தலைமை தாங்கினார். கருத்தரங்கை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெறுகிறது. விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும். விபத்தில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குழு ஆரம்பித்துள்ளோம். இது மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
சாலை விதிமீறல்களுக்கு அதிக அபராத தொகை விதிப்பது விபத்துகளை குறைக்கும். தமிழகத்தில் 525 மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் போக்குவரத்து துறை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை களைய, மத்திய அரசுடன் பேசி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஓராண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் 94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது. இவற்றில் திருத்தம் கேட்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மக்கள் முழுவதுமாக கடைபிடிப்பதில்லை. இலங்கை, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் சாலை விதிகளை கடைபிடிக்கின்றனர். நம் நாட்டில் சாலை விதிமீறல் அதிகமாக உள்ளது. விதிமீறல்களுக்கு அபராத தொகை அதிகமாக உள்ளது என கூறுபவர்கள் விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துகள் குறையும். மேலும் சாலை விதிகளை பின்பற்றினால் அதிக அபராத தொகை செலுத்தவும் தேவையில்லை.
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைகளில் தான் அதிக விபத்துகள் நடைபெறுகிறது. நகர்பகுதிகளில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிகிறார்கள். கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவது குறைவாக உள்ளது வருத்தமாக உள்ளது. சாலை விபத்துகளில் 68 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால் காயங்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலை நாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் கூட ஹெல்மெட் அணிகிறார்கள். ஒரு நாளுக்கு 47 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் தற்போது 33 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள் தரமாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. எனவே சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. சட்டங்களில் மாற்றம் மற்றும் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு தான் அதிகளவில் போராடி வருகிறது. அதைத்தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. மக்கள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை குறைக்க வேண்டும். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கோவையில் கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜசேகர் முயற்சியினால் உயிர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் மூலம் போக்குவரத்து சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் தமிழக போக்குவரத்து ஆணையாளர் சமயமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதை அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் கோவை கங்கா ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ராஜசேகர் பேசினார். கருத்தரங்கில் 13 மாநில போக்குவரத்து அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சாலை பாதுகாப்பு சங்க சான்றிதழ்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

Related Tags :
Next Story