விபத்தில் தனது மகன் சிக்கி இருப்பதாக கூறி தொழில் அதிபரிடம் பணம் கறந்த ஆசாமி கைது
விபத்தில் தனது மகன் சிக்கி இருப்பதாக கூறி தொழில் அதிபரிடம் பணம் கறந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மிராரோட்டை சேர்ந்தவர் தொழில் அதிபர் சுதானி. இவருக்கு அண்மையில் செல்போனில் ஒருவர் நண்பராக அறிமுகமானார். அவர் தான் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சுதானியிடம் பேசிய அந்த நபர், ராஜ்கோட்டில் இருந்து மும்பை நோக்கி வரும் போது சாலை விபத்தில் சிக்கி எனது மகன் படுகாயமடைந்து விட்டதாக கூறி மருத்துவ செலவிற்காக உதவி செய்யும் படி தெரிவித்தார்.
இதனை நம்பிய அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் வெளியே அவரை சந்தித்து ரூ.47 ஆயிரத்து 500 பணத்தை கொடுத்தார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த நபர் சுதானியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சிகிச்சை பலனின்றி தனது மகன் உயிரிழந்து விட்டதாகவும், ரூ.92 ஆயிரம் கொடுத்தால் தான் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடலை பெற முடியும் எனக்கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த சுதானி விசாரித்த போது, அந்த நபர் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆசாமியை தொடர்பு கொண்டு பணத்தை வாங்கி கொள்வதற்கு சயானுக்கு வரும்படி அழைத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ராஜ்கோட்டை சேர்ந்த சலீம் (வயது50) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் தொடர்புடைய கூட்டாளி நவின் பாண்டே (65) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இதே போன்று 5 பேரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.

Related Tags :
Next Story