அரியலூர் மாவட்டத்தில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 14,048 பேர் எழுதுகின்றனர்


அரியலூர் மாவட்டத்தில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 14,048 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:30 AM IST (Updated: 1 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 14,048 பேர் எழுதுகின்றனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வை (குரூப்-4) 47 மையத்தில் 14,048 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வை கண்காணிப்பதற்காக 47 முதன்மை கண்காணிப்பாளர், 11 நடமாடும் குழு மற்றும் 5 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு மைய அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) கண்டிப்பாக உடன் எடுத்து வர வேண்டும். மேலும் தேர்வு எழுதுபவர்களின் நலனுக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கடுமையான நடவடிக்கைக்கு...

மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவக்குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த வித மின்னணு சாதனங்களையும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி அதனை தேர்வு மையத்திற்குள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரிய வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். மேலும் தேர்வு நடவடிக்கைகளை வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story