தீமிதி திருவிழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி


தீமிதி திருவிழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 Sept 2019 3:30 AM IST (Updated: 1 Sept 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேட்டை அடுத்த மேட்டுக்காளிங்கராயநல்லூரில் உள்ள பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.

மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்த மேட்டுக்காளிங்கராயநல்லூரில் உள்ள பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவிலில் உள்ள வலஞ்சுழி செல்வ விநாயகர், மன்னாத சுவாமி, பச்சையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மன்னாத சுவாமிக்கு பூ போடுதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சாமி வீதியுலா நடைபெற்றபோது, அக்னி கரகம் எடுத்துவரப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story