விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி,
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் திலிபன் ராஜா, மாநில பொறுப்பாளர்கள் மு.கா.ஷாஜகான், தெ.கலைமுரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்றவேண்டும். பொன்னமராவதி பஸ் நிலையத்திலிருந்து அண்ணா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவான சாலை அமைத்து தர வேண்டும். பொன்னமராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பொன்னமராவதி பஸ் நிலையம் அருகில் இருக்கும் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக ஆக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் பொன்.தமிழரசன், சின்னு.பழகு, செந்தில்குமார், பொன்.சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story