நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக தச்சை கணேசராஜா பதவி ஏற்பு
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக தச்சை கணேசராஜா பதவி ஏற்றுக்கொண்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, சத்யானந்த் சீனிவாசகம், வே.ஆறுமுகம், சண்முகசுந்தரம், ராமகிருஷ்ணன், ஜெரால்டு, காளியப்பன், சிவசுப்பிரமணியன், கனகராஜ், வைத்தியலிங்கம், சுரேஷ்குமார், மா.ஆறுமுகம், லட்சுமி, பெருமாள், அய்யாத்துரை, வெங்கடேசன், செல்லம்மாள், அம்பிகா, பாலஅங்கம்மாள், கிராஸ்இம்மாக்குலேட், லதா ஆகிய 21 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கடந்த 27-ந் தேதி அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட துணை பதிவாளருமான ராஜன் அறிவித்தார். தலைவர், துணை தலைவர் பதவிக்கான வேட்பு மனு நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு தச்சை கணேசராஜாவும், துணை தலைவர் பதவிக்கு பெருமாளும் மனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மாலையில் அவர்கள் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைவராக தச்சை கணேசராஜாவும், துணை தலைவராக பெருமாளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த பதவி ஏற்பு விழா மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது.
விழாவில், அமைச்சர் ராஜலட்சுமி, விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மனோஜ்பாண்டியன், நெல்லை ஆவின் தலைவர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜ், இளைஞர் அணி செயலாளர் அரிகர சிவசங்கர், கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பாஸ்கரன், முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story