நெல்லை மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்
நெல்லை மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) 92 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை,
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாமன்னர் பூலித்தேவன் 304-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகிரி, மானூர் தாலுகாகளில் தலா 2 கடைகள், கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி தாலுகாகளில் தலா 14 கடைகள், பாளையங்கோட்டையில் 22 கடைகள், திருவேங்கடத்தில் 5 கடைகள், நெல்லையில் 16 கடைகள், வீரகேரளம்புதூரில் 3 கடைகள் என மொத்தம் 92 கடைகள் மூடப்பட வேண்டும்.
இந்த தாலுகாகளில் மது விற்பனை, மதுபாட்டில்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story