கன்னிவாடி அருகே, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 வாலிபர்கள் மீது வழக்கு


கன்னிவாடி அருகே, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 வாலிபர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 9:14 PM GMT)

கன்னிவாடி அருகே, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னிவாடி,

கன்னிவாடி அருகே காப்பிளியப்பட்டியில் ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கன்னிவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் காப்பிளியப்பட்டியில் உள்ள வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது காப்பிளியப்பட்டி-கன்னிவாடி சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் அறையில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த பெட்டிகள் குறித்து வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அந்த பெட்டிகளை சோதனை செய்தனர்.

அப்போது அவற்றில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கூடிய பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த கன்னிவாடி 7-வது வார்டை சேர்ந்த உசேன் மகன் சிக்கந்தர்(வயது 32), சாகுல்அமீது மகன் ரபீக்(30) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட் களை அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்தார்கள், அவர்களுக்கு அவற்றை விற்பனை செய்தது யார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story