வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூரில் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பினை கைவிட வேண்டும், வங்கி துறையை சீரழிக்கும் விதமான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story