அந்தியூர் அருகே உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது
அந்தியூர் அருகே உடும்பு வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் தொட்டக்கோம்பை. இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி, வனவர் சக்திவேல் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து வந்தனர். அப்போது வனப்பகுதி வழியாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் தொட்டக்கோம்பை கிராமத்தை சேர்ந்த மாறன் (வயது 55), அவருடைய மருமகனான அத்தாணி அருகே உள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ் (37) என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடி அதை சமைத்து தின்றது போக மீதம் உள்ள இறைச்சியை தொட்டக்கோம்பையில் உள்ள வீட்டில் காய வைத்து, அதை எருமைக்குட்டைக்கு கொண்டு சென்றதும்,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாறன், நடராஜ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து காயவைத்த ½ கிலோ உடும்பு இறைச்சி, வேட்டையாட பயன்படுத்த சுருக்கு கம்பி மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story