திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 21,616 பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 21,616 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 1 Sept 2019 10:45 PM (Updated: 1 Sept 2019 6:46 PM)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 72 மையங்களில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 21, 616 பேர் எழுதினர்.

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 போட்டித் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்விற்கு திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் நீங்கலாக அனைத்து வட்டங்களிலும் நடைபெற்றது. இதில் திருவாரூரில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 72 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத 25 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 21 ஆயிரத்து 616 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 798 பேர் எழுதவரவில்லை.

பறக்கும் படை

இந்த தேர்விற்காக 11 பறக்கும் படை அலுவலர்கள், 17 சுற்றுக்குழு அலுவலர்கள், 92 முதன்மை கண்காணிப்பாளர்கள், 92 ஆய்வு அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story