மாவட்டம் முழுவதும், குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்


மாவட்டம் முழுவதும், குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:30 AM IST (Updated: 2 Sept 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 130 மையங்களில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்.

தேனி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்தது. இந்த தேர்வுக்காக தேனி மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் மொத்தம் 29 ஆயிரத்து 856 பேர் தேர்வு எழுதினர்.

தாலுகா வாரியாக தேனி தாலுகாவில் 9 ஆயிரத்து 504 பேரும், ஆண்டிப்பட்டி தாலுகாவில் 3 ஆயிரத்து 670 பேரும் தேர்வு எழுதினர். போடி தாலுகாவில் 4 ஆயிரத்து 34 பேரும், பெரியகுளம் தாலுகாவில் 4 ஆயிரத்து 417 பேரும், உத்தமபாளையம் தாலுகாவில் 8 ஆயிரத்து 231 பேரும் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதுபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை கண்காணிக்க 19 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 130 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story