அரசு டவுன் பஸ்சை இயக்க பயணிகள் வேண்டுகோள்


அரசு டவுன் பஸ்சை இயக்க பயணிகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு டவுன் பஸ்சை இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், நாட்டார் மங்கலம் வழியாக ஆலத்தூர் கேட் வரை இயக்கப்படும் ஒரு அரசு டவுன் பஸ் தினமும் காலை, மதியம், இரவு ஆகிய நேரத்தில் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. அந்த அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் சென்று வந்தனர். இதனால் அந்த பஸ் அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஆலத்தூர் கேட்டில் இருந்து இரவு 8.45 மணிக்கு துறையூருக்கு அந்த அரசு டவுன் பஸ் இயக்கப்படாமல், ஆலத்தூர் கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 6 மணிக்கு தான் துறையூருக்கு இயக்கப்படுகிறது.

கோரிக்கை

இதனால் ஆலத்தூர் கேட்டில் இருந்து துறையூருக்கு இரவும், துறையூரில் இருந்து அதிகாலை ஆலத்தூர் கேட்டிற்கு இயக்கப்பட்ட அந்த அரசு டவுன் நிறுத்தப் பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பயணிகள் பலர் ஆலத்தூர் கேட்டில் இருந்து ஷேர் ஆட்டோ, கார், கால் டாக்சி போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர்.

எனவே பயணிகள் நலன்கருதி ஏற்கனவே இயங்கிய நேரத்திலே துறையூரிலிருந்து, ஆலத்தூர் கேட் வரை பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story