பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்,
காரைக்கால் டவுன் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களை குறி வைத்தும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காரைக்கால் தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து உத்தரவின்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன், சிறப்பு அதிரடிப்பிரிவு இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்கால் சிங்காரவேலர் சாலை, சில்வர் சாண்ட் நகரில், ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பிளாஸ்டிக் பை ஒன்றை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில் 21 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திருநள்ளாறு தேனூர் பகுதியைச்சேர்ந்த ஹனிபா (வயது 41) என்பதும், அவர் கடந்த சில நாட்களாக தமிழக பகுதியான முத்துப்பேட்டையிலிருந்து, கஞ்சா வாங்கி வந்து அவற்றை பொட்டலங்களாக கட்டி காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரி இளைஞர்களுக்கு ரூ.50, ரூ.100 ஆகிய விலையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story