டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 27 ஆயிரத்து 168 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 27 ஆயிரத்து 168 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:30 AM IST (Updated: 2 Sept 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 168 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 991 பேர் தேர்வுக்கு வரவில்லை.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. இதைபோல புதுக்கோட்டைமாவட் டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்காக புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 90 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்விற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 159 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 168 பேர் எழுதினார்கள். மீதமுள்ள 4 ஆயிரத்து 991 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர், தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுப்பட்டனர். தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. தேர்வு முடிந்தவுடன் அனைத்து வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.



Next Story