குரூப்-4 தேர்வை 24 ஆயிரத்து 47 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 24 ஆயிரத்து 47 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:30 AM IST (Updated: 2 Sept 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை 24 ஆயிரத்து 47 பேர் தேர்வு எழுதினர்.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை எழுத 104 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 28 ஆயிரத்து 408 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் நேற்று நடைபெற்ற தேர்வை 24 ஆயிரத்து 47 பேர் மட்டும் எழுதினர்.

தொடர்ந்து மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேர்வு எழுதியவர்களின் விவரம் வருமாறு:- சிவகங்கை தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 6 ஆயிரத்து 534 பேரில், 5 ஆயிரத்து 555 பேர் தேர்வு எழுதினர். தேவகோட்டை தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 523 பேரில், 2 ஆயிரத்து 99 பேர் தேர்வு எழுதினர். இளையான்குடி தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 1,766 பேரில், 1,507 பேர் தேர்வு எழுதினர்.

காரைக்குடி தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 6 ஆயிரத்து 568 பேரில், 5 ஆயிரத்து 395 பேர் தேர்வு எழுதினர். மானாமதுரை தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 3 ஆயிரத்து 319 பேரில், 2 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுதினர். திருப்பத்தூர் தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 356 பேரில், 1,956 பேர் தேர்வு எழுதினர்.

காளையார்கோவில் தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 300 பேரில், 1,948 பேர் தேர்வு எழுதினர். திருப்புவனம் தாலுகாவில் விண்ணப்பித்திருந்த 3 ஆயிரத்து 42 பேரில், 2 ஆயிரத்து 683 பேர் தேர்வு எழுதினர்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டார். இதே போல் மாவட்ட வருவாய் அதிகாரி லதா காரைக்குடி பகுதியில் பார்வையிட்டார்.

Next Story