குரூப்-4 தேர்வெழுத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய கலெக்டரின் மனைவி
தேர்வு மையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தேர்வு எழுத, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் மனைவி பூமா அன்பழகன் தன்னார் வலராக உதவி செய்தார்.
கரூர்,
தமிழகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 80 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் தளவாபாளையத்தில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தேர்வு எழுத, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் மனைவி பூமா அன்பழகன் தன்னார் வலராக உதவி செய்தார். இந்நிலையில் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அன்பழகன், அவருடைய மனைவி தன்னார்வலராக செயல்பட்ட அறைக்கும் வந்து பார்வையிட்டார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளில், தானாக தேர்வு எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒரு தன்னார்வலர் வீதம் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கான தேர்வு மையம், தேர்வு நாளன்று காலை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அந்த மையத்திற்கு அவர்கள் சென்று, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வார்கள். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம், தன்னார்வலர்கள் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை கூறி, அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை விடைத்தாளில் குறிப்பிடுவார்கள். அதன்படியே கரூர் மாவட்ட கலெக்டரின் மனைவியும், தன்னார்வலராக நியமிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பெண் தேர்வெழுத உதவியுள்ளார், என்றனர்.

Related Tags :
Next Story