காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 594 மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி 4 ஆயிரத்து 594 மையங்களில் நடைபெறுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி மிக பெரிய அளவில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 594 மையங்களில் நடைபெறுகிறது.
முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளையும் செய்து கொள்ளலாம். இதனை பொதுமக்களுக்கு விளக்கும் அறிவிப்பு பிரசுரங்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் வாக்காளர் பட்டியல் குறித்து பொதுமக்கள் அந்தந்த மையங்களில் சென்று தங்கள் பெயர்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story