உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை: பால் வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை: பால் வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 1 Sep 2019 10:00 PM GMT (Updated: 1 Sep 2019 8:33 PM GMT)

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாக குழந்தையை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த பால் வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கழுகுமலை,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 32) பால் வியாபாரி. இவருக்கு திருமணம் முடிந்து, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டையை சேர்ந்த ராஜ் மனைவி வடகாசி (35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது.

கடந்த மாதம் 5-ந் தேதி காலையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாக வடகாசியின் குழந்தை தானேஷ் பிரபாகரனை (1¼) வடகாசியுடன் சேர்ந்து சாமிநாதன் கொலை செய்தார். இதில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சாமிநாதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்றுக் கொண்டு, சாமிநாதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சாமிநாதனிடமும், சிறை அதிகாரிகளிடமும் வழங்கினார்.

Next Story