என்.ஜி.ஓ. காலனி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி


என்.ஜி.ஓ. காலனி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 Sept 2019 3:30 AM IST (Updated: 2 Sept 2019 9:15 PM IST)
t-max-icont-min-icon

என்.ஜி.ஓ.காலனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ.காலனி அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர்(வயது 47). இவர் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் இருந்து முகிலன்விளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மர ஆசாரியான ஜோஸ்லின் விமல் (27) என்பவர் தனது நண்பர் ராஜனுடன்(35) வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஜோஸ்லின் விமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த ராஜன், சேவியர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோஸ்லின் விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story