பொது மேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்: இருவழி ரெயில்பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்களா?
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தென் மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க இந்த பகுதி எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் தென்மாவட்ட ரெயில்வே திட்டப்பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தென் பகுதியில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் நடைபெறும் ரெயில்வே திட்டப்பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தென்பகுதி எம்.பி.க்கள் தென் மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதையை விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும். கடந்த ஆண்டு மதுரையில் இருந்து வாஞ்சிமணியாச்சி, வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரம் வரையில் இருவழி ரெயில் பாதை திட்டப்பணி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இத்திட்டப்பணி 2021-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டப்பணிக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் நிலையில் நிதிநிலை அறிக்கையில் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதால் 3 ஆண்டுகளுக்குள் திட்டமிட்டபடி இருவழி ரெயில் பாதை பயன்பாட்டிற்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் இருவழி ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் கூடுதல் ரெயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்படும்.
இதேபோன்று மதுரை தூத்துக்குடி இடையே அருப்புகோட்டை விளாத்திகுளம் வழியாக 144 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை ரூ. 800 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இத்திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் ரெயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியே முழுமையாக முடிவடையவில்லை என கூறப்படுகிறது. இந்த அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடிக்கு செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் இந்த பாதை வழியாக இயக்கப்படும்போது நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வாய்ப்பு ஏற்படும்.
இதேபோன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் இன்னும் இயக்கப்படாமலே உள்ளது சென்னை-செங்கோட்டை இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் நிலையில் அந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விருதுநகர்-மானாமதுரை அகல ரெயில் பாதை வழியாக விருதுநகர் மாவட்ட கிழக்கு பகுதி மக்கள் பயனடையும் வகையில் கூடுதலாக நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொல்லம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தினசரி இயக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.
விருதுநகர் ரெயில் நிலையத்தில் 4 நடைமேடையை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி மாநில அரசின் நடவடிக்கையால் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் எம்.பி.க்கள் தவறாது கலந்து கொண்டு தென்மாவட்ட மக்களுக்கு பயன்படக்கூடிய ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்துவதுடன், சென்னை-செங்கோட்டை மார்க்கத்திலும் விருது நகர்-மானாமதுரை அகல ரெயில் பாதை வழியாகவும் கூடுதல் ரெயில்களை இயக்கவும், தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயிலை தாமதிக்காமல் இயக்கவும் குரல் கொடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story