வாணரப்பேட்டையில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - ஒருவர் காயம்
வாணரப்பேட்டையில் கோவில் திருவிழாவின்போது ரவுடிக்கு குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
புதுச்சேரி,
புதுவை வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்பு பகுதியில் எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாமிக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.
அதன்படி எல்லை காளியம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழாவை காண அப்பகுதியை சேர்ந்தவர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழாவில் பிரபல ரவுடி ஒருவர் தனது கூட்டாளிகளுடன் கலந்து கொண்டதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் ஏ.எப்.டி. திடல் பகுதியில் இருந்து முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் அந்த ரவுடியை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். ஆனால் மர்ம கும்பல் வீசிய வெடிகுண்டுகள் குறி தவறி கோவிலில் சுவற்றில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் திருவிழாவில் பங்கேற்ற நபர் ஒருவர் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரவுடியும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். திருவிழாவின்போது கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தும் போலீஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Related Tags :
Next Story