அமைச்சர் கந்தசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் மர்ம மனிதன் ஒருவன் தொடர்பு கொண்டு பேசினான். அவன் அமைச்சர் கந்தசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டான்.
விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று இந்த மிரட்டலை கேட்டதும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் மிரண்டுபோயினர். இது தொடர்பாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சமூக நலத்துறை அமைச்சரான கந்தசாமிக்கு உப்பளம் அம்பேத்கர் சாலையிலும், கிருமாம்பாக்கம் அருகே உள்ள வம்பாபேட்டிலும் வீடுகள் உள்ளன. இதைத்தொடர்ந்து முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் உத்தரவின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் அமைச்சர் கந்தசாமியின் வீடுகளுக்கு போலீசார் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அங்குலம் அங்குலமாக சோதிக்கப்பட்டது. மேலும் வீட்டின் அருகே உள்ள பகுதிகள், கார்கள் போன்றவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதற்கிடையே மிரட்டல் வந்த எண்ணை தெரிந்துகொண்டு அது யாருக்கு சொந்தமானது? என்பதை கண்டறியும் வேலையில் போலீசாரில் ஒருபிரிவினர் ஈடுபட்டனர்.
அப்போது மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியில் இருந்து மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் கூனிமேடு நம்பிக்கை நகரை சேர்ந்த புவனேஷ் (வயது 19) என்ற வாலிபர் இந்த மிரட்டலை விடுத்திருப்பது தெரியவந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
இவர் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு பலமுறை இதுபோன்ற மிரட்டல் விடுத்தவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story