சேலம் அருகே, வீடுபுகுந்து தங்க சங்கிலி, டி.வி. திருட்டு
சேலம் அருகே வீடுபுகுந்து தங்க சங்கிலி, டி.வி. ஆகியவற்றை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கருப்பூர்,
சேலம் அருகே கருப்பூர் இந்திரா நகர் பகுதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபாலன். இவரது மனைவி பாலாமணி (வயது 32). கணவன், மனைவி இருவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வெளிப்புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த ஒரு எல்.இ.டி. டி.வி.யையும் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து பாலாமணி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி, டி.வி. ஆகியவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story