திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது


திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Sep 2019 9:45 PM GMT (Updated: 2 Sep 2019 8:30 PM GMT)

திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான விவசாயிகள் வந்திருந்து தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அப்போது கலெக்டர் பேசும்போது, பிரதமமந்திரி கிசான் மந்தன் ஓய்வூதிய திட்டம் ஆகஸ்டு 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் பெரிய ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் சிறுபாசன ஏரிகள் தூர்வாரும் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் குடிமராமத்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வீணாகாமல் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயம் பாதிக்கும் பகுதிகளில் உள்ள அங்கீகாரம் இல்லாத அரசு விதிமுறைகளை மீறிய வண்ணமீன் மற்றும் இறால் பண்ணைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் திரளான அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story