பாட்டுபாடி சத்தம் போட்டதை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


பாட்டுபாடி சத்தம் போட்டதை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2019 3:45 AM IST (Updated: 3 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

பாட்டுபாடி சத்தம் போட்டபடி வந்ததை கண்டக்டர் கண்டித்ததால் ஆத்திரத்தில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

ஆவடியில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி சென்னை மாநகர பஸ்(தடம் எண் 27 எச்) சென்று கொண்டிருந்தது. அண்ணாநகர் ரவுண்டானா வழியாக சென்றபோது, பஸ்சில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சகபயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாட்டுபாடி சத்தம்போட்டு கொண்டே வந்தனர்.

அப்போது பஸ் கண்டக்டர், மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் அமைதியாக வருமாறு கல்லூரி மாணவர்களை கண்டித்தார். இதனால் அவருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்களான அம்பத்தூரை சேர்ந்த குணசேகர்(19), ஜெயசூர்யா(20), சந்தோஷ்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சில மாணவர்களிடம், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டனர்.

Next Story