மாவட்ட செய்திகள்

எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை + "||" + Woman commits suicide by eating ant powder

எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை

எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை
வீரபாண்டி அருகே, எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
உப்புக்கோட்டை,

வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி பவுன்தாய் (வயது 50). இவர்களுடைய மகள் தமிழரசி (24). இவருக்கும், கம்பத்தை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தமிழரசி தனது கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாரீஸ்வரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் தமிழரசி கோபித்து கொண்டு தனது குழந்தையுடன் தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசி எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை
பரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை
சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
4. குறிஞ்சிப்பாடி அருகே, 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தற்கொலை
குறிஞ்சிப்பாடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளை எரித்துக்கொன்று, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. சின்னசேலத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை - தாயார் திட்டியதால் விபரீத முடிவு
சின்னசேலத்தில் தாயார் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.