மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றதால் போலீசார்- பா.ஜ.க.வினர் மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் + "||" + at Sivagangai Police-BJP clash over attempt to remove Ganesh statue Sub-Inspector transferred

சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றதால் போலீசார்- பா.ஜ.க.வினர் மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றதால் போலீசார்- பா.ஜ.க.வினர் மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்ற போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை,

சிவகங்கை நகரில், தொண்டி ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நேற்று முன்தினம் 3 அடி உயர மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை திடீரென வைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த சிவகங்கை நகர் போலீசார் அங்கு வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி சிலையை எடுக்க முயன்றனர். இதையறிந்த பா.ஜனதாவினர் மாவட்ட செயலாளர் உதயா தலைமையில் அங்கு வந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலின் போது, பா.ஜனதா நிர்வாகிகள் உதயா மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் தாக்கினராம்.


இதை கண்டித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில், நகர் தலைவர் தனசேகரன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமபிரபு, மாவட்ட செயலாளர் நாகேஸ்வரன், நகர் துணை தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் தொண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மாவட்ட செயலாளர் உதயா, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தன்னை தாக்கியதாக புகார் கூறியதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை ஆயுதப்படைக்கு இடமாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் உள்பட 3 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பார்த்து நலம் விசாரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை அருகே ஜீவ சமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேர் கைது
சிவகங்கை அருகே ஜீவசமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பந்தல், மின்விளக்கு அலங்காரத்துக்கு ரூ.3 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2. சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
4. சிவகங்கை அருகே 1,000 ஆண்டு பழமையான யானை சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே 1,000 ஆண்டு பழமையான யானை சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. சிவகங்கையில் ரெயிலில் சங்குகள் கடத்த முயன்ற 2 பேர் சிக்கினர்
சிவகங்கை ரெயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சோதனையின்போது ரெயிலில் தடை செய்யபட்ட சங்குகளை கடத்த முயன்ற 2 பேர் சிக்கினர்.