வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால் 8 மாத கர்ப்பிணி பரிதாப சாவு


வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால் 8 மாத கர்ப்பிணி பரிதாப சாவு
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால் 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

போத்தனூர்,

கோவை சரவணம்பட்டியைஅடுத்த கீரணத்தம்பகுதியை சேர்ந்தவர்செல்வக்குமார். இவருடையமனைவி பாரதி(வயது 22).இவர்களுக்கு திருமணமாகி1½ ஆண்டுகள் ஆகிறது.இந்தநிலையில்பாரதி கர்ப்பமானார். 8மாத கர்ப்பிணியானஅவருக்கு கடந்தமாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து ஒத்தக்கால்மண்டபத்தில்உள்ள தனதுபெற்றோர்வீட்டுக்கு பாரதிசென்றார். நேற்று முன்தினம் மதியம் அவர் வழக்கம்போல் உணவு சாப்பிட்டு விட்டு உடல் சோர்வாகஇருப்பதாக கூறி தனதுஅறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து அவருடைய தாய்அறைக்கு சென்றுபார்த்துள்ளார். அப்போது பாரதி உடல் நடுங்கியவாறுமயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மகளைமீட்டு கோவை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றாா். அங்குஅவரை பரிசோதித்தடாக்டா்கள்அவர் ஏற்கனவேஇறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பாரதியின்உடலை பார்த்துஉறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன்பாரதிக்கு திருமணமாகி1½ ஆண்டு களே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணையும் நடந்து வருகிறது.

பாரதியின் வயிற்றில் இருந்த குழந்தை எப்படியோ இறந்து உள்ளது.இதன்காரணமாகஅவருக்கு வலிப்பு மற்றும் லேசான மாரடைப்புஏற்பட்டு பரிதாபமாகஇறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story