கடலூர் தென்பெண்ணையாற்றில், மர்மமான முறையில் இறந்து கிடந்த எலக்ட்ரீசியன் - போலீசார் விசாரணை


கடலூர் தென்பெண்ணையாற்றில், மர்மமான முறையில் இறந்து கிடந்த எலக்ட்ரீசியன் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தென்பெண்ணையாற்றில் எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அருகே தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து, பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆற்றில் பிணமாக மிதந்தவர் கடலூர் புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் என்பது தெரியவந்தது. மேலும் புதுச்சேரிக்குட்பட்ட குமந்தான்மேடு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்துவிட்டு திரும்பி வந்தபோது போதையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேக்கிக்கின்றனர்.

இதையடுத்து வடிவேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்பெண்ணையாற்றுக்குள் பிணங்கள் மர்மமான முறையில் மிதப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்று பலமுறை பிணங்கள் மிதந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றின் தரைப்பாலம் அருகே 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். எனவே வரும்காலங்களில் இதுபோன்று ஆற்றுக்குள் பிணங்கள் மிதப்பதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story