திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஏரியில் குடிமராமத்து பணிகள் - அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்


திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஏரியில் குடிமராமத்து பணிகள் - அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் ஒன்றியத்தில், ஏரியில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ஒன்றியம், குரிசிலாப்பட்டு பாப்பானூர் ஏரியில் ரூ.5 லட்சம் செலவில் முட்புதர்கள், கருவேலமரங்களை அகற்றும் குடிமராமத்து பணி தொடக்க விழா நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கில்லி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.முருகேசன் வரவேற்றார். பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றும் பணியை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சி.செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி மகேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கவிதா ஆசைதம்பி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

இதேபோல், பல்லவள்ளி, இருணாப்பட்டு கிராமத்தில் உள்ள குட்டைகளை தூர்வாரும் பணிகளை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

ஜொல்லகவுண்டனூரில் தரை கிணறு பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் கிணறு பகுதியை பார்வையிட்டார். பின்னர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி தருவதாகவும், பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆண்டியப்பனூர், பூங்குளம், மரிமாணிகுப்பம், பெருமாபட்டு ஆகிய 4 ஏரிகளிலும் தலா ரூ.5 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது’ என்றார்.

Next Story