பேஷன் டிசைனருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த 30 வயது பெண் பேஷன் டிசைனராக இருந்து வருகிறார். அந்தேரியில் உள்ள வேலைவாய்ப்பு முகாமில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார்.
மும்பை,
வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வந்த அப்சல் சையத்(வயது37) அவரது விண்ணப்பத்தை பார்த்து வேலை வாங்கி தருவதாக கூறி உறுதி அளித்தார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை அப்சல் சையத் தொடர்பு கொண்டு வேலை கிடைத்து இருப்பதாகவும், அதற்காக நேர்காணலுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார். இதனை நம்பிய அப்பெண் அங்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது, அப்சல் சையத் வேலை வேண்டுமெனில் தன்னிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மால்வாணியை சேர்ந்த அப்சல் சையத்தை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story