ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:14 AM IST (Updated: 4 Sept 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற 14-ந் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story