தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2019 11:15 PM GMT (Updated: 3 Sep 2019 10:55 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பிளாஸ்டிக் பைகளை காண்பித்து எழுப்பிய பிரச்சினை வருமாறு:-

சாமிநாதன்: புதுவையில் கடந்த மாதம் முதல் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நாளில் அத்தகைய பொருட்கள் 100 டன் அளவுக்கு விற்பனையாகிறது. மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் என்ன செய்கிறது.? உற்பத்தியாளர்களை கேட்டால் நாங்கள் அமைச்சரை பார்த்துவிட்டோம் என்கிறார்கள்? அதற்கு என்ன அர்த்தம்? பிளாஸ்டிக் நிறுவனங்களில் ஏன் ஆய்வு நடத்தவில்லை?

அன்பழகன் (அ.தி.மு.க.): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இங்கு விலக்கு அளித்துள்ளர்கள். புதுவை கடத்தல் பிராந்தியமாக மாறிவிட்டது.

அமைச்சர் கந்தசாமி: தடையை அமல்படுத்த அரசு அதிகாரிகளை கொண்ட குழு அமைத்தோம். வேண்டுமானால் இன்னும் ஒரு குழு போட்டு கண்காணிக்கலாம். தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story