டி.கே.சிவக்குமாரின் கைது மகிழ்ச்சி கொடுக்கவில்லை; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
பெங்களூரு,
எடியூரப்பா அப்போது கூறியதாவது:- என் வாழ்க்கையில் நான் யார் மீதும் பழிவாங்கும் அரசியல் நடத்தியது இல்லை. நான் யாருக்கும் கெட்டது செய்தது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டம் தன் கடமையை செய்யும்.
டி.கே.சிவக்குமாரின் கைது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். அவர் வெளியில் வந்தால் மற்றவர்களை விட நான் தான் அதிக மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story