மும்பையில் மராட்டிய முதல்-மந்திரியுடன் எடியூரப்பா சந்திப்பு
மும்பையில் மராட்டிய முதல்-மந்திரியை சந்தித்து பேசிய எடியூரப்பா, மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
மகதாயி நதி நீர் பிரச்சினை கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அந்த தீர்ப்பை மத்திய அரசு இன்னும் அரசிதழில் வெளியிடவில்லை. இதனால் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உடன் இருந்தார். மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் எடியூரப்பா, கொய்னா அணையில் இருந்து ஒரே நேரத்தில் அதிகளவில் நீரை மராட்டிய அரசு திறந்துவிட்டதால், கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட கிருஷ்ணா ஆற்று படுகையில் உள்ள மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் வரும் காலத்தில் தண்ணீரை திறப்பதற்கு முன்பு கர்நாடக அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறும் கூறியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story