திருப்பூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது; தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்ததில் கை, கால்களில் காயம்
திருப்பூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்ததில் கை, கால்களில் காயம் அடைந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி வீதியில் ஒரு கட்டிடத்தில் மேல்மாடியில் 4 ஆண்டுகளாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். மாநகர போலீஸ் நண்பர்கள் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1-ந் தேதி இரவு பாலமுருகன், தனது நிதி நிறுவனத்தில் இருந்து வெளியே ரோட்டில் நடந்து வந்தபோது 4 பேர் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினார்கள். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் விக்னேஷ்வரன் உள்பட 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் வடக்கு உதவி போலீஸ் கமிஷனர் வெற்றிவேந்தன் அறிவுரையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், தங்கவேல் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலையாளிகள் நல்லூர் விஜயாபுரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் விஜயாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து அவர்கள் தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் கீழே விழுந்ததில் 4 பேருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் சூசையாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்வரன்(24), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார்(23), சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த உதயக்குமார்(23), திருப்பூர் மிலிட்டரி காலனியை சேர்ந்த நந்தக்குமார்(21)என்பது தெரியவந்தது.
விக்னேஷ்வரன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.10 ஆயிரத்தை பாலமுருகனிடம் கடனாக வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் அவருக்கு பணம் கொடுக்காமல் விரட்டி விட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த விக்னேஷ்வரன், பாலமுருகனுக்கு கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார். அந்த கோபத்தில் விக்னேஷ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதில் விக்னேஷ்வரன் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலைமிரட்டல் வழக்கும், முத்துக்குமார் மீது அவினாசி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும், உதயக்குமார் மீது குரோம்பேட்டை, தாம்பரம் போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகளும், நந்தக்குமார் மீது திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கும் உள்ளன. இவர்கள் கோவை சிறையில் இருந்தபோது நண்பர்களாகியுள்ளனர். நந்தக்குமாருக்கு சொந்தமான வீட்டில் பதுங்கியிருந்த போது 4 பேரும் போலீசில் சிக்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story