பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஊதுபத்தி குச்சி தயாரிப்பு தீவிரம்
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஊதுபத்தி குச்சிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
தாயில்பட்டி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வந்து குவிவதால் ஆலை அதிபர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசு தயாரிப்பின் உபதொழில்களும் இந்த ஆண்டுகளை கட்டி உள்ளன.
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளதால் ஊதுபத்தி குச்சிகள் தயாரிப்பும் இரவு பகலாக நடந்து வருகிறது. சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் புதுவகையான மிகப்பெரிய ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை நீளமாக இருப்பதால் வெடிகளை தூரத்திலிருந்தே பற்ற வைத்து வெடித்து மகிழ இலகுவாக இருக்கும்.
இதனை குடிசை தொழிலாக இந்த கிராமத்தில் செய்து வருகின்றனர். சாதாரண மரத்தூள் மற்றும் மரக்கரி தூள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஊதுபத்தி குச்சிகளும் வெளி இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Related Tags :
Next Story