மறு உத்தரவு வரும் வரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் செயல்பட தடை - ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் செயல்பட தடை விதித்து, மறு உத்தரவு வரும்வரை அதனை பின்பற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மிதுன்சக்கரவர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
நான் உசிலம்பட்டி இ.புதுப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். இந்த சங்கத்துடன் சேர்த்து மதுரை மாவட்டத்தில் 9 தொகுதியும், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டது. 9 தொகுதிக்கும் ஒரு பொது பிரிவு உறுப்பினர், 5 பெண் உறுப்பினர்கள், 3 எஸ்.சி., எஸ்.டி., பிரிவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 17 உறுப்பினர்கள், சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளவர் தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும் என்பது விதி. கடந்த மாதம் 22-ந்தேதி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தேனி மாவட்டத்தை தனியாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழரசன் எந்த ஒரு பால் கூட்டுறவு சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. மேலும் 17 உறுப்பினர்கள் முழுமையாக இல்லாத நிலையில் தலைவர் மட்டும் நியமிக்கப்பட்டு இருப்பது சங்க விதிகளுக்கு புறம்பானது.
எனவே தலைவர் பதவியில் தமிழரசன் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என விளக்கம் அளிக்கவும், அவர் தலைவராக செயல்பட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழரசன் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக செயல்படக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story