கல்வி சுற்றுலா சென்றபோது, ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கேரள மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு


கல்வி சுற்றுலா சென்றபோது, ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கேரள மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Sept 2019 4:15 AM IST (Updated: 5 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

கல்வி சுற்றுலா சென்ற மாணவியை, ரெயிலில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்த கேரள மாணவரை போலீசார்தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் கடந்த 29-ந்தேதி மங்களூருவுக்கு மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் கல்லூரியில் படித்து வரும் 26 மாணவர்கள், 6 மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் என 34 பேர் சென்றனர். இவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.

இந்த கல்வி சுற்றுலாவுக்கு கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வரும் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி ஒருவரும் சென்றார்.

ரெயிலில் சென்று கொண்டிருந்த போது, அதே கல்லூரியில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவர் தங்கபாலன் (வயது 21), என்பவர் பொள்ளாச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, அந்த மாணவரை கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் மாணவ-மாணவிகள் மங்களூருவில் இறங்கி தனியார் பஸ்சில் சுற்றுலா தலங்களை பார்வையிட சென்றனர். அப்போது மாணவ-மாணவிகள் பஸ்சில் நடனமாடிய படிஜாலியாக பயணம் செய்தனர். அப்போதும் மாணவர் தங்கபாலன் அந்த மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவரை அவர் மீண்டும் எச்சரித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்வி சுற்றுலா முடிந்து மாணவ-மாணவிகள் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூருவில் இருந்து கோவைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனா். அப்போது குடிபோதையில் இருந்த மாணவர் தங்கபாலன், ஓடும் ரெயிலில் பொள்ளாச்சி மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து மாணவர் தங்கபாலனை கேரள மாநிலத்தில் உள்ள சொரனூர்ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் இறக்கிவிட்டார்.

இதையடுத்து ரெயில் கோவை வந்ததும் பாதிக்கப்பட்ட மாணவி கோவை ரெயில்வே போலீ சில்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் தங்க பாலனை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story