7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கும் விரைவில் அமல்படுத்துவோம் - நாராயணசாமி உறுதி
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் அமல்படுத்து வோம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பாக தி.மு.க. சட்ட மன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச் சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
சிவா: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழுவின் பரிந் துரையை அமல்படுத்தக் கோரி போராட்டம் அறிவித் துள்ளனர். இதற்காக ஊரெல் லாம் நோட்டீசு ஒட்டி யுள்ளனர். அவர்களுக்கும் 7-வது ஊதியக்குழுவின் பரிந் துரையை அமல்படுத்த வேண்டும்.
அன்பழகன் (அ.தி.மு.க): கல்வித்துறைக்கு சுமார் ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளோம். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுமார் 26 ஆயிரம் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏன் அமல்படுத்தவில்லை.
சிவா: அவர்கள் ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அறிவித்துள்ளார்கள்.
அனந்தராமன் (காங்): அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக் கும் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
ஜெயமூர்த்தி (காங்): அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் 500 பேர்தான் உள்ளனர். அவர்களுக்கும் பரிந்துரையை அமல்படுத் துங்கள்.
அமைச்சர் கமலக்கண்ணன்: 7-வது ஊதியக்குழுவின் பரிந் துரையை புதுவை அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் அமல்படுத்தினார். அதன்பின் இப்போது சொசைட்டி கல்லூரி ஆசிரியர் களுக்கு அறிவித்துள்ளனர். அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கு வழங்குவது தொடர்பாக நான் முதல்- அமைச்சரிடம் பேசி உள்ளேன். அவரும் விரைவில் செய்து தருவதாக உறுதியளித்துள் ளார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி: 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி யதற்கான தொகை ரூ.550 கோடியை மத்திய அரசு நமக்கு தரவில்லை. நாம் நமது மாநில நிதியிலிருந்து விடுவித்தோம். சொசைட்டி கல்லூரி ஆசிரியர் களுக்கும் அந்த பரிந்துரையை அமல்படுத்த பல தடை இருந் தது. அதையும் தாண்டி அவர் களுக்கு கொடுத்துள் ளோம். இதனால் ரூ.41 கோடி கூடுதல் செலவாகிறது. இப்போது நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 90 சதவீத நிதியை தருகிறோம். இவர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதற்கான கோப்பையே கவர்னர் மாளிகையில் இருந்து திருப்பி அனுப்பினார்கள். அதன்பின் அமைச்சரவையில் முடிவு செய்து கண்டிப்பாக அவர் களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறினோம். அதன்பின் ஒப்புதல் கொடுத் தார்கள். இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை.
நாம் இப்போது ரூ.8 ஆயிரத்து 425 கோடிக்கு பட்ஜெட் போட்டுள்ளோம். இந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந் துரையை அமல்படுத்த நிதி தேடவேண்டி உள்ளது. வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றவேண்டும். இந்த ஆண்டு அவர்களுக்கு தடையில்லாமல் சம்பளம் தருவோம். 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கே மத்திய அரசு ரூ.320 கோடி தராமல் உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் இதற்கான நிதியை கண்டுபிடித்து அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கும் 7-வது ஊதியக்குழுவின் பரிந் துரையை அமல்படுத்துவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story