மார்த்தாண்டம் அருகே, கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை


மார்த்தாண்டம் அருகே, கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Sept 2019 3:00 AM IST (Updated: 5 Sept 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 32), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மேலும், அஜித்குமாருக்கு மது குடிக்கும்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் கடன் வாங்கினார். ஆனால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.

இதற்கிடையே பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினர்.

இதனால், மனமுடைந்த அஜித்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story