சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு


சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 5 Sep 2019 11:00 PM GMT (Updated: 5 Sep 2019 8:10 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை, 

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிமு.கண்ணப்பனின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டுவிழா கோவைமாவட்டம் ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்குமு.கண்ணப்பன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தி.மு.க.துணை பொதுச்செயலாளர்சுப்பு லட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில்தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின்கலந்துகொண்டு பேசியதாவது:- புராணத்தில் கண்ணன்தேரோட்டியதுபோல, இவர்காரோட்டிகண்ணப்பன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நூலில் தி.மு.க.வின் வரலாறும் அடங்கி உள்ளது. பல லட்சம் பேர் இருப்பதால்தான் இந்த இயக்கம் இன்று இமயம் போல் வளர்ந்து உள்ளது. தியாகிகளால் வளர்ந்த இயக்கம் தி.மு.க. ஆகும். இதற்கு இன்று நான்தலைமை தாங்கியிருப்பதைநினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்தி திணிப்புக்குஎதிராக மட்டுமின்றிசமூகநீதியைபெற்றுத்தந்த இயக்கம் தி.மு.க. இந்த இயக்கத்தில் உள்ள மூத்த முன்னோடிகள் இதுபோன்ற புத்தகங்களை எழுத வேண்டும். இது பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்கள் தி.மு.க.வின்வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள்.அனைத்து சாதியினரும்அர்ச்சகர் ஆக முடியும் என்றசட்டத்தை கொண்டுவந்தது தி.மு.க.

தமிழ்மொழியை, இனத்தை அழிக்க திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம்எதிர்ப்பு குரலை கொடுத்து கொண்டிருக்கிறோம். திணிக்கப்பட கூடிய இந்தி மொழிக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்றுகூறி பதவியேற்றுதக்க பதிலை அளித்து விட்டனர். 39எம்.பி.க்கள்நாடாளுமன்றம் சென்று என்ன செய்வார்கள் என்று கூறினார்கள்.

தற்போது 39எம்.பி.க்களும்தமிழக நலனுக்காக மத்தியில் குரல்கொடுத்து கொண்டுஉள்ளனர்.

வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் நாம் பெற்றது வெற்றி இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெற்றி இல்லை என்றால் நீங்கள் 2016-ம்ஆண்டு இடைத்தேர்தலில் 40 மற்றும் 50 ஓட்டுகள், 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை வெற்றி இல்லை என்று கூறுவீர்களா. கடந்தசட்டமன்ற தேர்தலில்1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சிக்கு வந்தீர்கள். இதனை வெற்றி இல்லை என ஒப்புக்கொள்வார்களா?

கருணாநிதி தலைவராகஇருந்த போதுசட்டமன்ற தேர்தலில்184 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க.ஆட்சியை பிடித்து சாதனைபடைத்தது. அதே போன்று வருகிறசட்டமன்ற தேர்தலில்தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெற்றுஆட்சியை பிடிக்கும். அதன்பின்னர் 25 ஆண்டுகளுக்கு தி.மு.க. எனும் இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் தி.மு.க. தொண்டர்கள், மாவட்ட, ஒன்றிய,நகர செயலாளர்கள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story