மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் அம்பிகாபதி, சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்ற கூடாது. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி கொள்முதல் விலையை உயர்த்தி தராமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்க கூடாது.
விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலியை ரூ.400 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதில் அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர் சித்தார்த்தன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story